செய்திகள்

துமிந்த சில்வாவிற்கு மரண தண்டனை

476eba9d929b1cb34e564553caccb241_xl

பாரத லக்ஷ்மன் கொலை வழக்கில் துமிந்த சில்வா உட்பட ஐவருக்கு மரண தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தொழிற்சங்க ஆலோசகருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நான்கு பேர் படுகொலை செய்யப்பட சம்பவம் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட ஐவருக்கு மரண தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் மேற்படி தீர்ப்பு வழங்கியுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஷிராண் குணரட்ன, பத்மினி என் ரணவக்க, என்.சி.பி.சி. மொராயஸ் ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை இடம்பெற்று கடந்த ஜூலை 14 ஆம் திகதி விசாரணைகள் நிறைவடைந்தது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட 13 பிரதிவாதிகளுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

வழக்கின் சாட்சிகள் விசாரணை நிறைவடைந்துள்ள நிலையில் மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top
}