சர்வதேசம்

வருந்துகிறார் டுட்டேர்ட்டே

rodrigo-duterte-arrives-laos

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மீது, பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி றொட்ரிகோ டுட்டேர்ட்டேயின் அவதூறு காரணமாக, இரு தலைவர்களுக்குமிடையிலான சந்திப்பு இரத்துச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தனது கருத்துத் தொடர்பாக, ஜனாதிபதி டுட்டேர்ட்டே வருத்தத்தை வெளியிட்டுள்ளார்.

லாவோஸைச் சென்றடைந்த அவர், தனிப்பட்ட தாக்குதல்களாக அமைந்த அந்த வார்த்தைப் பிரயோகத்துக்காக மன்னிப்புக் கோருவதாகத் தெரிவித்தார்.

“(ஒபாமாவுடன்) முறுகல்களை மேற்கொள்ள நான் விரும்பவில்லை. இந்தப் பூமியிலுள்ள எந்த நாட்டிலும் மிகவும் அதிகாரமிக்க ஜனாதிபதி அவர்” எனத் தெரிவித்தார். அத்தோடு, மனித உரிமைகள் சம்பந்தமான விடயங்களை, ஐக்கிய அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகள், தொடர்ச்சியாக ஜனாதிபதி ஒபாமாவிடம் தெரிவித்துக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

அவரது கருத்துக்கு முன்பாக அறிக்கையொன்றை வெளியிட்ட பிலிப்பைன்ஸ் அரசாங்கம், “நீதிக்குப் புறம்பான கொலைகள் குறித்து, ஜனாதிபதி ஒபாமா அறிவுரை வழங்குவார் என வெளியான ஊடக அறிக்கைகளைப் பற்றி விவரிக்கும் போது, ஜனாதிபதி டுட்டேர்ட்டேயின் பலமான சொற்பிரயோகங்கள் ஏற்பட்டன. ஊடகங்களுக்கான அவரது கருத்து, அதிகளவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமை குறித்து அவர் வருத்தமடைகிறார்” எனத் தெரிவித்திருந்தது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top
}