செய்திகள்

75ஆவது வயதில் மாத்தளை ஸாஹிரா

007

மாத்தளை ஸாஹிரா கல்லூரி தனது 75 வது வருட பூர்த்தியைக் கொண்டாடுகிறது. இதற்காக பல முக்கிய வேலைத்திட்டங்களும் செயற்பாடுகளும் பிரம்மாண்ட முறையில் முன்னெடுக்கப்படுகின்றன. கடந்த 10.9.2016 அன்று ஸாஹிராவின் நடைபவணி (Zahira Walk) வெற்றிகரமாக நிறைவடைந்தது. இன்று (12.9.2016) முதல் 18.9.2016 வரை பாரியளவிலான கல்விக் கண்காட்சி இடம்பெறவிருக்கிறது. பாடசாலை மாணவர்களின் ஆக்கங்கள் மாத்திரமன்றி முப்படையினரின் காட்சிக் கூடம், அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் காட்சிக் கூடங்கள், சிறுவர்களுக்கான களியாட்ட நிகழ்வுகள், விஷேட விற்பனை நிலையங்கள் இன்னும் பற்பல அம்சங்களும் இக்கண்காட்சியில் இடம்பெறவிருக்கின்றன. சீருடையில் வரும் சகல பாடசாலை மாணவர்ளுக்கும் இலவசமாக இதைப் பார்வையிட முடியும்.

இது மாத்திரமன்றி கல்லூரியின் வளர்ச்சிக்கான பற்பல அபிவிருத்தித் திட்டங்களும் ஆரம்பிக்கப்படவிருக்கின்றன.
மேற்படி நிகழ்வுகளை முன்னிட்டு கடந்த 9.9.2016 அன்று முதல் விஷேட வானொலி சேவை ஒன்றும் ‘ஸாஹிரா எப்.எம். (Zahira FM)’ என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை இதன் நிகழ்ச்சிகளை நேயர்கள் 103.1 FM அலைவரிசையில் கேட்கலாம். மாணவர்களின் நிகழ்ச்சிகள், சிறுவர் நிகழ்ச்சிகள், விஷேட வைத்திய நிபுணர்களுடனான ஆரோக்கி சந்திப்பு, சட்டம் மற்றும் நடைமுறை விடையங்கள், பொதுவான விடையங்கள், போட்டி நிகழ்ச்சிகள், கல்லூரியின் விடையங்கள், கண்காட்சி நேரடி, பல்சுவை நிகழ்ச்சிகள், பொழுதுபோக்கு அம்சங்கள் போன்ற இன்னும் பற்பல விடையங்களும் இதில் ஒலிபரப்பாகின்றன. எதிர்வரும் 18.9.2016 வரை Zahira FM ஐ நேயர்கள் கேட்கலாம்.
– மு.ஆ.ஆ. சர்ஜதீன்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top
}