செய்திகள்

மத்திய மாகாண ஆசரியர் வெற்றிடங்களுக்கான விண்ணப்பதாரிகளின் வயதெல்லை 45 ஆக அதிகரிக்கப்பட வேண்டும்.

mutha

(S.M.Rafi)

மத்திய மாகாணத்தில் பட்டதாரி மற்றும் டிப்லோமாதாரி ஆசிரியர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. இச் சேவைக்காக விண்ணப்பிக்கும் உச்ச வயதெல்லை 35 ஆக வரையறுக்கப்பட்டிருக்கின்றது.

மத்திய மாகாணத்தில் தமிழ் மொழி மூல பாடசாலைகள் பலவற்றிலும் பாரிய அளவிலான வெற்றிடங்கள் காணப்படுகின்றன. இவற்றை முழுமையாக நிறப்பும்  அளவில் தமிழ் மொழி மூல பட்டதாரிகள் இல்லாத நிலை காணப்படுகிறது. உச்ச வயதெல்லை 35 ஆக மட்டுப்படுத்தப்பட்டிருப்பது தமிழ் பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களை
நிறப்புவதில் பாரிய சவாலாக விளங்குகின்றது.

குறித்த வயதெல்லை 45 ஆக அதிகரிக்கப்படுமிடத்து மேற்படி வெற்றிடங்களின் ஒரு பகுதியையேனும் நிறப்பம் செய்யலாம் என மத்திய மாகாண சபை உறுப்பினர் எம். டீ. எம் முத்தலிப் தெரிவிக்கின்றார். குறித்த வயதெல்லை 45 வயதாக  அதிகரிப்பதற்கான தமது கோரிக்கைகளை தனக்கு அனுப்பி வைக்குமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த வெற்றிடங்களுக்காக விண்ணப்பிக்கும் தகுதி பெற்ற மத்திய மாகாணத்தைச் சேர்ந்த  35க்கும் 45 வயதுக்கும் இடைப்பட்ட தமிழ் மூல பட்டதாரிகள் தமது  கோரிக்கைகளை முன்வைக்குமிடத்து இந்தடவடிககையை துரிதப்படுத்தலாம். கீழ்வரும் முகவரிக்கு கோரிக்கைகளை அனுப்பி வைக்குமாறு கேற்கப்படுகின்றனர்.

Hon M T A Muthalif
Member of Central Provincial Council
ALADIN FARM (Pvt) Ltd
Elkaduwa Road,
Wattegama.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top
}